Mayotte ; பிரான்சின் வெளி மாகாணம் மையோத்ஐ புரட்டிப் போட்ட புயல்; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்ù
.
பிரான்ஸின் மயோட்டே (Mayotte) பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் எனச் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸின் மயோட்டே பகுதியில் கடந்த சில நாட்களாகச் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.
இந்நிலையில் தற்போது, மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் சீரற்ற காலநிலையால் மீட்புப் பணிகளைத் தொடர முடியாததுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறித்த புயல் மணித்தியாலத்துக்கு 225 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளதால் பெரும் சேஎதங்கள் ஏற்பட்டுள்லதாக கூறப்படுகின்றது.
கடு புயலின் காரணமாக , மயோட்டின், பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவு, நீர் மற்றும் தங்குமிடங்களுக்காகப் போராடி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
அதேவேளை வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16, நாளை திங்கட்கிழமை காலை முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளதாக Météo-France சற்று முன்னர் அறிவித்துள்ளது.வடக்கில் Aisne மற்றும் Oise ஆகிய மாவட்டங்களுக்கும், தென் மேற்கில் Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய மாவட்டங்களுக்கும், கிழக்கில் Savoie, Haute-Savoie, Isère மற்றும் Hautes-Alpes ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பொழிவு இடம்பெறுவதாகவும், அங்கு வெள்ள அனர்த்தம் காரணமாக ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.