Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

காஸா எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 47 பேர் உயிரிழப்பு

.

காஸா எல்லையில் இஸ்ரேலால் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளனர். காஸா எல்லையிலுள்ள அல் மவாசி பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

காசா: வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 47 பேர் உயிரிழந்தனர். குடியிருப்புப் பகுதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 கட்டடங்கள் இடிந்தன. தாக்குதலுக்குள்ளான இடத்தில் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் உள்ளூர் மக்கள் கழுதைகள் மூலம் உடல்களைக் கொண்டுவந்தனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினரின் ஆதரவு பெற்ற பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படையினரை அழிக்கும் நோக்கத்தில் காசா எல்லைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே வடக்கு காஸாவில் உள்ள பெயிட் லாஹியா பகுதியில் இஸ்ரேல் நேற்று நள்ளிரவு வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 47 பேர் உயிரிழந்ததாக அந்நநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், குடியிருப்பு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 5 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகள் நேரிட்ட பகுதிக்கு மீட்புப் படையினர் செல்ல முடியவில்லை என்றும், இதனால் கழுதைகள் மற்றும் வண்டிகள் மூலம் உடல்களை அப்பகுதியினரே மீட்டு வருவதாகவும் வாஃபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இப்போரில், இதுவரை காஸாவில் 42,847 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100,544 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்தனர். 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

மேலும்  இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் லெபனானில் 140 பேர் பலியானதாகவும், மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் படைகள் நேற்று ஒரே நாளில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 75 பேரும் மற்ற இடங்களில் 20 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் நுசைரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீதான நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் கமல் அத்வான் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மருந்துகள் மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் சேதமடைந்தது.

மருத்துவமனை ஊழியர்கள் பலர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதல்களில் ஆறு சுகாதார பணியாளர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் பெய்ரூட் அருகே உள்ள தஹியாவிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து காசாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டது. நேற்று மட்டும் காசா, லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.