நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு!
நான்காவது அரசவையின் 5வது அமர்வு நெதர்லாந்து, டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு நெதர்லாந்து நாட்டின் டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
18ம் திகதி மதியம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உதவிப்பிரதமர் தலமையில் சட்டத்துறை ஆராய்ச்சி,மற்றும் மனித உரிமைகள்,அரசியல் செயற்பாட்டு இளையோரது கல்விசார் சந்திப்புகள் நடைபெற்றன.
18ம் திகதி மாலை சர்வதேச மனித உரிமைகள் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நெதர்லாந்து நாட்டின் டென்ஹாக் நகரில் அமைந்துள்ள Humanity Hub, மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நடைபெற்றது.
சர்வதேச சட்ட வல்லுனர். TOBY CADMAN இவ் நினைவுப் பேருரையினை வழங்கியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவு சொற்பொழிவின் முதல் நாளில், மலர் அஞ்சலியின் போது செல் இசைக்கலைஞர் லோலா ஜூரகிச் தனது இசை நிகழ்ச்சியை வழங்கினார்...
19/05 இரண்டாம் நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றல்,பொதுச்சுடர் ஏற்றல், நெதர்லாந்து தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம், ஆகியவற்றுடன், நா.க.த.அரசாங்கத்தின் உதவி பிரதமர் திரு மகிந்தன் சிவசுப்ரமணியத்தின் வரவேற்பு உரையையுடன் ஆரம்பமாகின.
வட்டுக்கோட்டை தீர்மான 50 வது வருடமும்,ஈழத்தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பும் என்ற கருப்பொருளில்,சிறப்பு பேச்சாளர்களாக, திருமதி. அனெ மக்குலின், (Anne McLaughlin,)ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர், திரு சிவஞானம் சிறிதரன்,இலங்கை நாடாளமன்ற உறுப்பினர், (தமிழரசுக்கட்சி)
சபறினா கணேஸ்வரன், பிரான்ஸ் லாகுறேனேவ் நகரசபை உதவி மேயர். திரு லோறன்ஸ் ,சர்வதேச குற்றவியல் சட்டவாளர்,ஆகியவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மாலைநேர அமர்வில் கீழ்ச்சபை உறுப்பினர்கள்,மேல்சபை உறுப்பினர்கள் இணைந்த கூட்டமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் தமிழீழத்திக்கான அரசியல் யாப்பு வரைபது தொடர்பான ஆலோசனைகள்,கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
20/05 மூன்றாம் நாள் நிகழ்வுகள்.
சர்வதேச நீதி தொடர்பான விவரண ஒளிப்படம் ஒன்றுடன் ஆரம்பமாகியது. இந்த விவரணப்படத்தினை பிரான்ஸ் “எம் இனம்” எனும் இளையோர் அமைப்பின் முயற்சியில் இரு பிரெஞ்சு பெண்கள்(ஊடகவியலாளர்,நெறியாளர்)தயாரித்திருந்தனர். இவ் விவரணப்படம் திரையிடப்பட்ட பின் இரு பிரெஞ்சு பெண் இளையோரையும்,எம் இன அமைப்பின் இரு இளையோரையும், நெதர்லாந்து நாட்டின் இளையோரான லக்ஸலா ஜோன் அவர்கள் இந்த விவரணப்படம் தொடர்பான விபரங்களை நேர்காணல் மூலம் அவைக்கும்,வெளிஉலகிற்கும் எடுத்துவந்தார்.
நிறைவில் சர்வதேச சட்டவாளர்
திரு.லோறன்ஸ் அவரகளும்,நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர் திரு.ருத்திரகுமாரன் அவர்களும் தமது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். பி.ப ஆரம்பித்த அவை நடவடிக்கையில் அமைச்சர்கள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்பட்டன. இறுதியில் பிரதமர் மூன்றுநாள் அமர்வின் நிறைவுரை வழங்கியிருந்தார்.நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடு அமர்வு நிறைவுபெற்றது.


