Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனைவரது வாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டும்!

.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரதுவாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என வட மாகாண சபையின் அவைத்தலைவர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் , உலகத் தமிழ் மக்களின் தொன்மைச் சிறப்புமிக்க தைப்பொங்கல் நிகழ்வு வீடுகள்தோறும் நிறுவனங்கள் தோறும் நாளை கொண்டாடப்படுகின்றது.

தமிழ் இனத்தின் மரபுரிமை தினமாகவும் இது அமைகின்றது. உலகத்திலேயே பயிர்களுக்கு சக்தி வழங்கும் சூரியனுக்கும் ஏர் இழுக்கும் எருதுகளுக்கும் பொங்கல் மூலம் நன்றிக்கடன் செலுத்தும் தினமாகவே தைப்பொங்கல் விளங்குகின்றது.

இவை உழைக்கும் வர்க்கத்திற்கு மதிப்பளிக்கும் தமிழ் இனப்பண்பாட்டின் வெளிப்பாடு ஆகும். இது ஒரு சைவத்தமிழ் மக்களின் நிகழ்வாக உருவாகி வளர்ந்து வந்தாலும் காலப்போக்கில் தமிழ்த் தேசிய இனத்தின் பொங்கலாக பரிணமித்துள்ளது.

இந்துக்கள் அல்லாத ஏனைய சமயத்தவர்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மக்களும் தைப்பொங்கலைக் கொண்டாடுவதை நாம் காணலாம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரது வாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என வட மாகாண சபையின் அவைத்தலைவர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.