Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நேற்று(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

.

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நேற்று(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். 
1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி குருநகர் பகுதியில் இருந்து ஒரு படகில் 31 மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்ட தீவுக்கு சென்றிருந்தனர் . 

இதன் போது அங்கு நின்ற கடற்படை யினர் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும் வாளால் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர். இதன்போது 31 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 31 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.