Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி !

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு கடத்த முயற்சி.

போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி: முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் சிறுவனுடன் லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளார். எனினும் அவர்களின் பயண ஆவணங்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக எல்லைக் கண்காணிப்புப் பிரிவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.இதன்போது மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் பயண ஆவணங்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குறித்த சிறுவன் தன்னுடன் வந்த பெண் தமது தாய் இல்லை என்றும், தனது தாய் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து இரு பெண்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும், குழந்தையின் முன்னேற்றத்திற்காகவும் சிறுவனை லண்டன் அனுப்ப முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.மனிதக் கடத்தலுக்குப் பொறுப்பான இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனின் விவரங்களின் அடிப்படையில் சிறுவன் மற்றும் பெண்ணின் பயண ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளார்.இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.