‘அரகலய’ போராட்டக்காரர்களுக்காகவே நாமல்: இளம் தலைமையை ஆதரிக்குமாறு அழைப்பு
.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அரகலய போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
அனைவரும் எதிர்பார்க்கும் இளம் தலைவர் ஒருவர் எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தத் தயாராக உள்ளார். அவரை ஆதரிக்குமாறு இளைஞர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.
திருடங்கள் அனைவரும் கட்சியில் இருந்து சென்றுவிட்டதுடன், கட்சியும் தூய்மையாகிவிட்டது. எம்மோடு இணைந்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை அக்கட்சி அறிவித்துள்ளது. விரைவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நாமல் ராஜபக்ச செலுத்த உள்ளார்.
இதேவேளை, சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தமது பிரசார நடவடிக்கைகளை 16ஆம் திகதிமுதல் நாமல் ராஜபக்ச ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.