Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தனியார் வைத்தியசாலையில் கலாவதியான மருந்துப் பொருட்கள்- 100,000 ரூபா அபராதம்!

கலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலை

கலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு  100,000/= ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி   தலைமையிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த வைத்திசாலையில் பாவனைக்கு வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்களை கைப்பற்றியதுடன் குறித்த வைத்திய சாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த வழக்கானது   வியாழக்கிழமை(12)  கல்முனை நீதிவான்  நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட போது   குற்றத்தை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு நீதிமன்றத்தினால் 100,000/= ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த வழக்கின் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய புலனாய்வு உத்தியோகத்தர் இஷட்.எம் ஸாஜீத் குறித்த வழக்கு சம்பந்தமாக   மன்றில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.