Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

120 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 301 கிலோகிராம் கேரளா கஞ்சா - 3 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கை.து

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 43 முதல் 58 வயதுக்குட்பட்ட மன்னார் ஒலுதுடுவாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் வசிப்பவர்கள்.

120 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 301 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.   
யாழ்ப்பாணம், எழுவைதீவிற்கு​ அப்பால் வடக்கு கடலில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​மூன்று (03) சந்தேக நபர்களும், சுமார் முன்னூற்று ஒரு (301) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகும் 2025 மே 07 கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை கப்பல் எலார எழுவைதீவு கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு(01)  ஒன்று பயணிப்பதை அவதானித்து சோதனை செய்யப்பட்டது அந்த நேரத்தில், மூன்று (03) சந்தேக நபர்களையும் (01) டிங்கி படகும், எட்டு (08) பொதிகளில் நூற்று முப்பத்தொன்பது (139) பொதிகளாக பொதிச்செய்யப்பட்டிருந்த முந்நூற்று ஒரு (301) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவையும் கடற்படையினர் கைப்பற்றினர். 
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நூற்று இருபது (120) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 43 முதல் 58 வயதுக்குட்பட்ட மன்னார் ஒலுதுடுவாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

மூன்று (03) சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு (01) ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.