Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

.

ஆப்கானிஸ்தான் மீது, பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில், பாகிஸ்தான் அடுத்தடுத்து குண்டுகளை வீசியது.லாமன் உட்பட 7 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் சமீபமாக நடந்துவரும் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் தான் காரணம் என அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது.குறிப்பாக, தஹ்ரிக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு அடைக்கலம் கொடுக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தது.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானின், பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில், ஏழு கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிலும், பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் முர்க் பஜார் கிராமம் கடுமையாக சேதமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.