Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி!

.

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Nelsonயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 211  ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 03 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 02 விக்கெட்டுகளையும், நுவன் துஷாரா, மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

எனினும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை நியூசிலாந்து அணி  2 - 1 என்ற அடிப்படையில் ஏற்கனவே கைப்பற்றியமை குறிப்பிட்டதக்கது.