Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்; பல்கலைக்கழக ஆணைக்குழுவின் (யுஜிசி) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க.

பரீட்சை பெறுபேறுகளை இனந்தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்கள் வந்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்: பேராசிரியர் அமரதுங்க.

2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களையும் பெற்றோர்களையும் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை இனந்தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

“பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்திற்கான வழிமுறையாக செயல்படும் தனித்துவமான ஆவணங்கள். குறியீட்டு எண் உட்பட இந்த ஆவணங்களின் நகல்களைப் பகிர்வது சிலவேளை பாதிப்பாக அமையலாம் .வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது, உதவித்தொகை பெறுவது போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக பலர் இந்தத் தகவலைத் தவறாகப் பயன்படுத்தலாம். உண்மையான உரிமையாளர்களின் தகவல்கள் பிறரால் மாற்றியமைக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறியுள்ளார் .

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பேராசிரியர் அமரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.