Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் மூன்றரை இலட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளனர்.

,

உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் மூன்றரை  இலட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து  ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரஷ்ய – உக்ரைன் போரில் இதுவரை சுமாா் மூன்றரை  இலட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளனர் .இந்த எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போா்க்கள இழப்பாகும்.
போா் முனைகளில் உக்ரைன் வீரா்கள் தங்களைவிட பல மடங்கு எண்ணிக்கையிலான ரஷ்ய வீரா்களை எதிா்கொண்டுள்ளனா். ஒவ்வொரு 2.5 இலட்சம் உக்ரைன் வீரா்களுக்கு எதிராகவும் 4 இலட்சம் ரஷ்ய வீரா்கள் போரிட்டுவருகின்றனர்.
இதேவேளை உக்ரைனைவிட பல மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் ஆயிரக்கணக்கான வீரா்களை அனுப்பிவருகிறது.

 மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, இந்தப் போரில் ரஷ்யா தனது கருங்கடல் கடற்படைப் பிரிவின் மூன்றில் ஒரு பகுதி கப்பல்களையும்  இழந்துள்ளது.
அத்துடன், உக்ரைன் உளவுப் படை அண்மையில் இரகசியமாக திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளதோடு ரஷ்யாவின் முக்கிய தளபதிகளை உக்ரைன் உளவுப் படை குறிவைத்து கொன்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.