Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஒரு தொகுதி போதை மாத்திரைகள்

யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் 180 போதை மாத்திரைகளுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஒரு தொகுதி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் திலக்ஷி தனபாலா அவர்களின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் கொஸ்தாபிள் ரமேஷ் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கொழும்புத்துறை பகுதியில் வைத்து 20 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த இளைஞனிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையின் போது அந்த சந்தேக நபரினால் போதை மாத்திரைகள் வாங்கப்பட்ட வீடு காண்பிக்கப்பட்டது. அந்த வீட்டிலிருந்த சந்தேக நபர் பின்பக்க கதவு வழியாக தப்பிச் சென்ற நிலையில் 700 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.  தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்புதுறை பகுதியில்  3 சந்தேக நபர்கள் கைது!

யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் 180 போதை மாத்திரைகளுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 18,22, மற்றும் 24 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ர  பொலிஸ் அதிகாரி அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.