கனடா பிரதமர் போட்ட ட்வீட்; அதிர்ச்சியில் இந்திய மாணவர்கள்
.
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை 30 சதவிகிதத்திற்கும் கீழ் குறைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கனடாவில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அதே போல, வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா குறைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா உரிமத்தை இந்த அண்டு 35 விழுக்காடு அளவிற்கு குறைக்கப்படும். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 விழுக்காடு குறையும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ, நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டில் இருந்து வருவோரால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்தான். ஆனால், இந்த முறையை தவறாகப் பயன்படுத்தி அடிப்படையிலேயே அத்துமீறல்கள் நடக்கிறது. எனவே அதனை நாங்கள் ஒடுக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.