Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு!

இலங்கையில் குறிப்பிட்ட இரு நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை.

இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள்   சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர்.

 இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றனர்.

 தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். "உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.

  குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.