ஜீவாவுடன் நடிக்க மறுத்தாரா சிவகார்த்திகேயன்?.. அட பயங்கர தெளிவாத்தான் இருந்திருக்கார்.
.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்த வெற்றி சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகர் ஜீவா கொடுத்திருக்கும் சமீபத்திய பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் அறிமுகமானபோது சில படங்களிலேயே அவர் காணாமல் போய்விடுவார் என்றுதான் பலரும் கணித்தார்கள். ஆனால் சிவாவோ அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில் தொடர்ந்து வேலைகள் செய்தார். அதன் காரணமாக அவருக்கு வரிசையாக ஹிட் படங்கள் கிடைக்க ஆரம்பித்தன. முக்கியமாக டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலித்தன.
அமரன் மெகா ப்ளாக் பஸ்டர்: அந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் நடித்த ப்ரின்ஸ் படம் தோல்வியடைந்தாலும்; அடுத்ததாக அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களும் ஹிட்டடித்தன. சூழல் இப்படி இருக்க கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் சிவாவின் வளர்ச்சியை உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. அந்தப் படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் அறியப்படும் ஹீரோவாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஹிந்தியில்கூட அவர் விரைவில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, தனுஷைவிட அதிகம்: அமரன் படத்தின் வெற்றியால் சிவாவின் சம்பளமும் எகிறியிருக்கிறது. அவர் 50 கோடி ரூபாய்க்கும் மேல் தனது சம்பளத்தை நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கோலிவுட்டில் பல வருடங்களாக இருக்கும் சூர்யா, தனுஷ்கூட இன்னும் அந்த சம்பள தொகையை நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பளம் மட்டுமின்றி படத்தின் லாபத்திலும் சிவகார்த்திகேயன் பங்கு கேட்க ஆரம்பித்திருப்பதாகவும் அரசல் புரசலாக ஒரு தகவல் ஓடுகிறது.
தற்போதைய படங்கள்: இப்போதைக்கு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களுமே தனக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். மதராஸி படத்தின் முன்னோட்டம் சமீபத்தில்தான் வெளியானது. அதில் சிவா படு மாஸாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க ஜீவாவுடன் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன படம்: அதாவது அஹமது இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த படம் என்றென்றும் புன்னகை. கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் வினய் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனிடம்தான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் அதில் நடிக்க அவர் மறுத்துவிட்டாராம். இதனை ஜீவா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள், தான் வளர்ந்துவரும் சமயத்தில் ஹீரோவுக்கு நண்பர் கேரக்டரில் நடித்தால் தன்னால் ஹீரோவாக தொடர முடியாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு தெளிவாக அந்த வாய்ப்பை சிவா மறுத்துவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.