Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கனடாவில் தமிழர் மரபுரிமை மாதம்! ; தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

.

கனடாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், அதற்குரிய முழுமையான கௌரவம் இன்னமும் அடையப்படவில்லை. ஏனெனில் மிகமோசமான தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். எனவே அக்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து உறுதியாக வலியுறுத்துவோம் என கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார்.

தமிழர் மரபுரிமை மாதத்தை முன்னிறுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:

நாம் ஜனவரி மாதம் முழுவதும் கடும் உழைப்பாளிகளைக் கொண்டாடுகின்றோம். கனடாவில் வாழும் தமிழர்கள் அவர்களது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, பல தசாப்தகாலமாக எமது சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.

தமிழர்களின் இப்பாரம்பரிய வரலாறு பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். அவர்களது பாரம்பரிய கலாசாரமானது மொழி, இசை, கலை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் என்பவற்றின் ஊடாக வெளிப்படுகின்றது.

பாரம்பரிய நம்பிக்கைகள், குடும்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஊடாக வழிநடத்தப்படும் கனேடியத் தமிழர்களால் இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் வணிக நிலையங்கள், கலாசார அமைப்புக்கள் மற்றும் சமூக ஊடக நிலையங்கள் என்பன கனேடிய சமூகத்தையும், பொருளாதாரத்தையும் சீரமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.

இருப்பினும் நாம் கொண்டாடும் இந்த தமிழ் மரபுரிமை மாதம் துரதிஷ்டவசமாக அதற்குரிய முழுமையான கௌரவத்தை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை மிகமோசமான தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்.

எனவே கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியினரான நாம் இந்த தமிழர் மரபுரிமை மாதத்திலும், இவ்வாண்டு முழுவதும் மேற்குறிப்பிட்டவாறான மிகமோசமான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை உறுதியாக வலியுறுத்துவோம்.

அதேவேளை கனடாவில் வாழும் தமிழ்ச்சமூகத்தினரைக் கொண்டாடுவதில் நாம் பெருமையடைகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்