அப்பா பிரிட்டிஷ், அம்மா ஸ்ரீலங்கன்ஸ், பாண்டிச்சேரியில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கவர்ச்சி நடிகை சோனா ஹைடன்
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்டை முதலில் கொண்டு வந்தது தயாரிப்பாளர்கள் தான்.

கவர்ச்சி நடிகையாக சோனா ஹைடன் .குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார். மேலும், இவர், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தனதுவாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்கள் குறித்து பேசி உள்ளார்.
அப்பா பிரிட்டிஷ், அம்மா ஸ்ரீலங்கன்ஸ் இருவரும் பாண்டிச்சேரியில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில் தான், சினிமாவை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, நான் சினிமாவிற்கு வந்ததே ஒரு விபத்து தான். ஜீவிதா ராஜசேகர் கடைக்கு பக்கத்தில் தான் நான் மளிகை பொருள் வாங்குவேன் அப்போது தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் நடிக்கவிரும்பவில்லை. இருந்தாலும் 14 வயதில் லாண்டரியில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். அப்பா குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை, அம்மாவிற்கு சர்க்கரை வியாதி இருந்ததால், குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக அந்த வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டேன்.
என் வாழ்க்கையில் எல்லாமே அம்மா தான், என் அம்மா எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும், அம்மா சரியாக வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்தது. ஆனால், என் அம்மா சிரித்து நான் பார்த்ததே இல்லை, அவர்கள் சாவதற்கு நான்கு வருடத்திற்கு முன்பு தான் அவர்கள் சிரித்ததை நான் பார்த்தேன். எவ்வளவு தான் பணம் இருந்தாலும் என் அம்மாவின் சிரிப்புக்கு ஈடாகாது. இப்போது பலர், எதற்கும் வருத்தப்படாதே, மகிழ்ச்சியாக இரு என்று பலர் என் மீது அன்பை காட்டுகின்றனர். அதே அளவு அன்பை நான் ஒரே ஆளாக என் அம்மா மீது வைத்தேன். என் குடும்பத்தில் இருந்த கஷ்டம் காரணமாக 14 வயதிலேயே என் குடும்பத்தின் பாரம் என் தோள் மீது வந்துவிட்டது. இதனால், என் குழந்தை பருவத்தையே தொலைத்துவிட்டேன் என்றார். அப்பா பாசத்திற்காக ஏங்கினேன் கடைசி வரை அந்த பாசம் எனக்கு கிடைக்கவே இல்லை என்றார்.
சினிமாவிற்கு வந்ததும் , இரண்டு மூன்று முறை சினிமாவே வேண்டாம் என்று சினிமாவை விட்டு வெளியேறிவிட்டேன். அதன்பிறகு, மீண்டும் முயற்சி செய்து ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன் ஆனால், எனக்கு ஹீரோயினாக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அந்த ஆசை நடக்கவில்லை எனக்கு சில பட வாய்ப்புகள் வந்தன. அனைவரும், அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்கள் நான் அதற்கு நோ சொல்லிவிட்டேன். இதனால், படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது, அப்போது, நான் என்ன நினைத்தேன் என்றால், அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதற்கு பதில், கவர்ச்சி காட்டிவிட்டு போய்விடலாம் என கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டேன்,
தயாரிப்பாளர்கள் செய்யும் தவறு: நான் எவ்வளவு தான் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்டுகள் இருக்கிறது என்று சொன்னாலும், அந்த சினிமாத்துறை நான் காதலிப்பதால், சினிமாத்துறையை விட்டு விலகவில்லை. இந்த அட்ஜெஸ்ட்மென்டை முதலில் கொண்டு வந்தது தயாரிப்பாளர்கள் தான். ஆனால், ஒரு சில பத்து சதவீத ஆண்கள் செய்யும் தவறு காரணமாக ஹீரோவாக இருந்தாலும், தயாரிப்பாளராக இருந்தாலும் அவர்களுக்குத் தான் தேவையில்லாத கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்று சோனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்,
ஸ்மோக் : பிரபல நடிகை சோனா எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் 'ஸ்மோக்'. ஷார்ட்பிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் , சீரிஸை தயாரித்து உள்ளார். இந்த சீரிஸ் சோனாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோனாவாக ஆஸ்தா அபே நடித்துள்ளார். இந்த சீரிஸின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.