Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வாக்குச்சீட்டில் மறைந்து போன ”யானை” சின்னம்: குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியா?

.

இலங்கைத்தீவில் இது வரையில் இடம்பெற்றுள்ள சில ஜனாதிபதித் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியச் சின்னமான யானைச் சின்னம் வாக்காளர் சீட்டில் காணப்படவில்லை.

அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேக்காவின் அன்னம் சின்னத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கியிருந்த அதே கட்சியின் பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தது.

சஜித் அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேறு ஒருவரின் கட்சியையும் சின்னத்தையும் தேர்ந்தெடுத்திருந்தார்.

இந்த வருடமும் ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில் ஐ.தே.கவின் யானை தென்படாது.

எனினும், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் பேரின் விருப்பத்தைப் பெற்றிருந்த பொதுஜன பெரமுன தற்போது முற்றாகச் சிதைவடைந்துள்ளமை இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் மற்றுமொரு விசேட அம்சமாகும்.

இன்று, பொதுஜன பெரமுனவின் பலமான உறுப்பினர்கள் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால், பொதுஜன பெரமுன தோற்றுப் போய்விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச என்ற ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசின் எதிர்கால அரசியல் இருப்பு குறித்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முடிவெடுக்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுஜன பெரமுன எனும் ஜனரஞ்சக அரசியலின் எதிர்காலமும் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கப்படும் என்பதும் பலரது கருத்தாக உள்ளது.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கதிரைச் சின்னமும் மறைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.