வெசாக்தன்சல்களை, தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா? எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா
கஞ்சியை பரிமாறிக்கொண்டமைக்காக தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்
நோய் பரவலை காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை; வெசாக் தன்சல்களை தடை செய்வார்களா ?
கஞ்சியை பரிமாறிக்கொண்டமைக்காக தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் ( இறுதி யுத்தத்தின் போது அவர்களுக்கு கிடைத்த ஒரே உணவு) யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரவிடாமல் தடுக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றை அழிப்பதும் பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என மறுப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதின் நோக்கம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்றுகூடுவதன் மூலம் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலம்நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
வெசாக்தன்சல்களை தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர் இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லணிக்க ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சிகளை ஜெனீவாவில் மற்றுமொரு தீர்மானத்தை தடுப்பதற்கான ஏமாற்று நடவடிக்கை என தமிழ்மக்கள் கருதுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.