Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இளங்குமரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20.01.2026அன்று வழக்கு தவணையிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி  உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து கிராமசேவையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த சம்பவத்தை பொலிசார் 02.12.2025 அன்று  நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தனர். 

அதன்போது வழக்கு  28.09.2025   தவணையிடப்பட்டிருந்தது.குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும்  16-12-2025 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது  அடுத்த வழக்கு16.01.2026. இன்று தவணையிடப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் குறித்த வழக்கு இன்று பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக நிலையில் அவர்சார்பாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராகிய நிலையில் குறித்த சட்டத்தரணி குறித்த வழக்குக்காக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸ் பிணையில் சென்றிருந்தார் எனவும் இன்றைய தினம் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்வதனால் வரமுடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 

கிராமசேவையாளர் சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ .சுமந்திரன் பொலிஸ் பிணையில் சென்றால் குறித்த தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது கடமை எனவும் ஆஜராகாது சட்டத்தரணியை அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என பதில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதன்போது எதிர்வரும் 20.01.2026அன்று வழக்கு தவணையிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு தெரிவித்தார்.