Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மொசாத் (Mossad) அமைப்பின் முக்கிய அதிகாரி ரோமன் கோப்மென் (Roman Gofman) கொல்லப்பட்டாரா ?

இஸ்ரேலின் உளவுத்துறைத் தலைவர்களை வேட்டையாடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக ஈரானியப் புரட்சிக் காவலர் படை

ஈரானிய ஆதரவு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் (Mossad) அமைப்பின் முக்கிய அதிகாரி ரோமன் கோப்மென் (Roman Gofman) கொல்லப்பட்டதாக வெளியாகி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  ஈரான் நடத்திய 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4' (Operation True Promise 4) ஏவுகணைத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இஸ்ரேலிய ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் மொசாத் அமைப்பின் முக்கியப் பொறுப்பில் இருந்த ரோமன் கோப்மென் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  டெல் அவிவ் அல்லது ஜெருசலேமில் உள்ள உளவுத்துறை தொடர்பான முக்கிய அலுவலகம் அல்லது அவர் பயணித்த வாகனம் ஈரானின் அதிவேக ஏவுகணையால் (Hypersonic Missile) தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் உளவுத்துறைத் தலைவர்களை வேட்டையாடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக ஈரானியப் புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. வழக்கம் போல, தனது உயர்மட்ட அதிகாரிகளின் இழப்புகள் குறித்து இஸ்ரேல் உடனடியாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஊடகங்கள் "ஒரு முக்கிய பாதுகாப்பு அதிகாரி படுகாயமடைந்துள்ளார்" என்ற செய்தியை மறைமுகமாக வெளியிட்டு வருகின்றன.
இந்த இழப்பு இஸ்ரேலுக்குப் பெரியது? காரணம் ரோமன் கோப்மென் சாதாரண அதிகாரி அல்ல; அவர் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்.