Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈரானின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி!

அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் செல்வாக்குமிக்க மத மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார்.

ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷியா கொள்கைவாதியான அலிரேசா அராபி, ஈரானின் மத மற்றும் அரசியல் விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். கமேனியின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் அதிகாரக் கட்டமைப்பை வழிநடத்தும் உயரிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைவரைத் தீர்மானிக்கும் மற்றும் வழிகாட்டும் இந்தக் கவுன்சிலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இடைக்கால உயர் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அலி கமேனியின் நீண்டகால தலைமைத்துவத்திற்குப் பிறகு ஈரான் எந்த திசையை நோக்கிப் பயணிக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் புதிய தலைவர் அராபியின் பங்கு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. 
ஈரானின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் இந்த மாற்றங்கள் குறித்த மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத் தலைவர் ஒருவர் பதவியில் இல்லாதபோது அல்லது அவர் காலமானால், புதிய தலைவர் ஒருவரை நிபுணர்கள் பேரவை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு தற்காலிகத் தலைமைப் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் அலிரேசா அராஃபி இந்தப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் செல்வாக்குமிக்க மத மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். அவர் தற்போது ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாவலர் சபையின் உறுப்பினர், ஈரானிய மதக் கல்விக்கூடங்களின் தலைவர் மற்றும் நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றார். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அலி காமேனியின் மறைவு ஈரானுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில், நாட்டின் நிர்வாகம் மற்றும் இராணுவக் கட்டமைப்பைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அலிரேசா அராஃபியின் நியமனம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் நிபுணர்கள் பேரவை விரைவில் கூடி, நிரந்தரமான ஒரு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அலிரேசா அராஃபி நாட்டின் உயரிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார். இடைக்காலத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டாலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் உள்ளடங்கிய தற்காலிக சபையுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.