Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம்!

"மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (பெப்ரவரி 25) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
இது குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்.

மின்சார நுகர்வோர் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் தமது எழுத்துமூல அல்லது வாய்மூல கருத்துகளை சமர்ப்பிக்க மார்ச் 18 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி ஐந்து பிரதான இடங்களில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன:

மார்ச் 07: அம்பாறை (முதலாவது அமர்வு)
மார்ச் 11: வவுனியா
மார்ச் 12: மாத்தளை
மார்ச் 16: அம்பாந்தோட்டை
மார்ச் 18: இறுதிக்கட்ட வாய்மூல ஆலோசனை அமர்வு

பொதுமக்களால் முன்வைக்கப்படும் அனைத்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் முழுமையாகப் பரிசீலித்த பின்னரே, மின் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவை ஆணைக்குழு அறிவிக்கும்.
ஒருபுறம் கட்டணத் திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், மறுபுறம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர்.

மின்சார சபையை மறுசீரமைக்கும் செயன்முறையை அரசாங்கம் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில்:

"மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். இது குறித்த இறுதி முடிவு இன்றே (25) எட்டப்படும்."
இதனால் எதிர்வரும் நாட்களில் மின்சார சபையின் சேவைகளில் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.