Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

யாழ். காங்கேசன்துறைக்கு வந்த பாய்மரப்படகுகள் நாகபட்டினம் நோக்கி புறப்பட்டன!

,

யாழ். காங்கேசன்துறைக்கு வந்த பாய்மரப்படகுகள் நாகபட்டினம் நோக்கி புறப்பட்டன!

சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன.

400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club"  அங்கத்தவர்களால்  சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.

இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறையை வந்தடைந்த பாய்மரக் கப்பலில் இருந்த பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.