கின்னஸ் உலக சாதனை படைத்த ஈழத்து மாணவி: ஜனாதிபதி நேரில் அழைத்து பாராட்டு
.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கியுள்ளார்.
காணொளியான அனுப்பப்பட்ட பின்னர், மூன்று மாதங்களில் இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டுள்ளது.
பின்னர் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கின்னஸ் சாதனைக்கான விண்ணப்பம் முதல் அனைத்து விடயங்களையும் குறித்த மாணவியே தனது சுய முயற்சியில் மேற்கொண்டுள்ளார்.
இதே வேளை, கின்னஸ் சாதனை படைத்த மாணவியை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைத்து சாதனை சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.