யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-06.
வட்டுக்கோட்டை குருமடம் என்பது பிரித்தானிய இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம்.
வட்டுக்கோட்டை குருமடம் (Batticotta Seminary, பட்டிக்கோட்டா செமினறி) என்பது பிரித்தானிய இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இது அமெரிக்க இலங்கை மிசனினால் ஆரம்பிக்கப்பட்டது. இது 1855 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. சர் எமெர்சன் டெனன்ட் என்பவரின் பார்வையில் இக்கல்வி நிறுவனம் பல ஐரோப்பியக் கல்வி நிறுவனங்களின் தரத்துடன் ஒப்பிடக் கூடியதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இம் மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இக்குருமடம் மூடப்பட்டது. பட்டிக்கோட்டா குருமடத்தின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல் இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது
1837- ஜனவரி 05- கணிதம்இஇயற்கை தத்துவம் ஆகிய துறைக்கு பொறுப்பாக திரு. கென்றி மார்ட்டின் வட்டுக்கோட்டை குருமடத்தில் நியமிக்கப்பட்டார்.
யோர்ச் டாணியல் இந்து கிரகசாத்திரம், சமஸ்கிருதம்,இயற்கை கணிதம் ஆகியவற்றை கற்பிக்க நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாண பேராலயத்தின் வேலைகளை கவனிப்பதற்கு திருப்பணிமன்றம் என்ற அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
ஒரு முத்துக்குளிப்பு நிலையம் 10631-4-9 3/4 £ பவுண்ஸ் பணமீட்டியது.
ஏப்ரல் 05- யோன் பிலிப் சண்முகம் முதலாவது தமிழ் வெஸ்லியன் போதகராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1837- முதலாவது வெஸ்லியன் பெண்கள் விடுதி ஆரம்பிக்கப்பட்டது.
நவம்பர் 07- ஜெனரல் ஸ்ருவாட் மக்கென்சி இலங்கையின் கவர்னராகவும் ராணுவ தலைமை தளபதியுமாக பொறுப்பேற்க கொழும்பு வந்தடைந்தார்.
வீதிகளில் தூர அளவைக்காட்ட மைல்கற்களை வைப்பதற்கு முதல் மாதிரியை கென்றி மார்ட்டின் செய்து அதை அரச அதிபர் பி.ஏ டைக்கிடம் ஒப்படைத்தார்.
புவிசாத்திரம்இ சரித்திரம்இ காலக்குறிப்பு ஆகியவற்றிக்கு பொறுப்பாக திரு டபிள்யூ லோக்கும்இ கணிதத்திற்கு பொறுப்பாக ஈ றெக்வூட்டும் வட்டுக்கோட்டை குருமடத்தில் நியமிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண கச்சேரி பிரதான முதலியாராக பிலிப் முத்து கிறிஸ்ன முதலியாரின் இடத்திற்கு சவிரிமுத்து முதலியார் நியமிக்கப்பட்டார்.
அரச நிலங்கள் ஏக்கர் ஐந்து சிலிங்குகளுக்கு விற்கப்பட்டது.
1839- யூலை ஐரோப்பிய கத்தோலிக்க மிசனரி மாரை இலங்கையில் வேலை செய்யுமாறு ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது.
1839- குடிசனக்கணீப்பீடு - யாழ்ப்பாண -62137இமல்லாகம் -45305 தென்மராட்சி -43927இவடமராட்சி- 35747இ தீவுபகுதி-25292 மொத்தம் -212இ408
1839 -டயின்யூ மார்டின் வழக்கறிஞராக வேலை தொடங்கினார்.
1840- கல்விமானும்இகவிஞருமாகிய சேனாதிராச முதலியார் 60 வது வயதில் மரணமடைந்தார்.
தை 04- மின் வரி நிறுத்தப்பட்டது.
மார்ச் 01- செ.ஈ. ஒன்றேடி உதவி அரச அதிபராக யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றார்.
யூன் - திரு டைக் கோப்பாயில் அமெரிக்க திருச்சபையை விஸ்தரிக்க நிலம் தனியாக வழங்கினார்.
செப்ட 24- இலங்கை வங்கி அரச பட்டயத்துடன் கொண்டுவரப்பட்டது.
வட்டுக் கோட்டை குருமனையில் வண.டாக்டர் கொய்சிங்ரனின் கீழ் பல மாணவர்களுக்கு குருப்பட்டமளிக்கப்பட்டது.
ஒக் 19 - கடும் வயிற்றோட்டத்தின் காரணமாக நல்லூர் கந்தசாமி கோயில் நிர்வாகியான மாப்பாண முதலியார் மரணமடைந்தார்.
வண. றொபேட் பிரவுன் நல்லூர் ஆலய சபையை பொறுப்பேற்றார்.
1841 ஜனவரி - யாழ்ப்பாணதில் பத்திரிகை வெளியிடுதல் ஆரம்பம் திரு கென்றி மார்ட்டின்இசெத் பேய்சான் ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு மோர்னிங் ஸ்ரார் என்னும் பத்திரிகை முதன் முதலில் வெளியிடப்பட்டது.
ஜனவரி 15- யாழ்ப்பாண சுங்க நிலையத்திற் அருகே கடற்கரை யோரமாக முதலாவது செங்கட்டி சூளைஇஆறுமுகம் செட்டி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது.
ஆலய சபையால் நல்லூரில் முதலாவது பெண்கள் விடுதி ஆரம்பிக்கப்பட்டது.
பெப்ரவரி – மேற்கிந்திய தீவுக்கூட்டத்தை சேர்ந்த திரு கார்டி என்னும் செல்வந்தர் யாழ்ப்பாணம் வந்து புகையிலையும் ஏனைய பயிர்களும் பயிரிட வென 2000 ஏக்கர் அரச நிலத்தை தென்மராச்சியில் பணம் கொடுத்து வாங்கினார்.
பெப்ரவரி 28- திருகோணமலையிருந்து கப்டன் கொச் ரான என்பவர் யாழ்ப்பாணத்திற்கு கமாண்டராக மாற்றலாகி வந்தார்.
மார்ச் 05- 'கீழைத்தேய நாடுகளில் பெண்கள் கல்வியை மேம்படுத்தும் சபையை' சேர்ந்த செல்வி ருலீடில் என்பவர் யாழ்ப்பாண வெஸ்லியன் சபையினால் நிர்வகிக்கப்பட்ட 'இளம் பெண்கள் பாடசாலை'யுடன் வந்து இணைந்து கொண்டார்.
மார்ச் 09- ' உதவும் நன்பண் என்னும் சபை' நீதிமன்ற வளவில் ஒன்று கூடிய ஒரு சில ஆங்கிலேயஇ பறங்கியஇதமிழ் கனவான்களால் உருவாக்கப்பட்டது.
சுதேச மக்களுக்கு சேவையாற்றுவதற்காக ஆலய சபையை சேரந்த திரு. திருமதி யோன்சன் தம்பதியினர் யாழ்ப்பாணம் வந்து நல்லூரில் தங்கினர்.
ஏப்ரல் -நல்லூர் ஆங்கில பாடசாலை சுண்டுக்குளிக்கு மாற்றப்பட்டது.
1841.04.05 மேதகு லெப் nஐனரல் சேர் கொலின் காம்பெல் என்பவர் இலங்கை படைத்தளபதியாகவும் கவர்னராகவும் நியமனம் பெற்று இலங்கை வந்தடைந்தார்:
1841.03 ஆலய சபையை சேர்ந்த வேதம் போதிக்கும் திரு. தோமஸ் மோர்ரிமர் என்பவர் வணவை அட்லியுடன் இங்கிலாந்து சென்று திரும்பினார். இவர்தான் ஐரோப்பாவிற்கு சென்ற முதல் யாழ்ப்பாணாத்தவர் ஆவார்.
1841.04 யாழ்ப்பாணத்திற்கும் ஊர்காவற்துறைக்குமிடையில் தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது
1841.04 தமிழ் அரிச்சுவடி ஓழுங்கில் முதலாவது தமிழ் ஆங்கில அகராதி முதன் முறையாக மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிசன் அச்சகத்தில் வெளியிடப்பட்டது.
1841 யூலை இலங்கை வங்கி திறக்கப்பட்டது
1842 பிசப் வின்சன்டி றொசாறியோ மரணமடைந்தார்
1842.04.07 இங்கிலாந்தைசேர்ந்த பெருந்தோட்டகாரர்களான திருவாளர் திரு பேய்னஸ் கிளார்க் ஆகிய இருவரும் வடமாகாணத்தில் பெரும் விவசாய திட்டங்களை நடைமுறைப்படுத்த வந்தனர்.
1842.05.13 மானிப்பாய் உடுவில் ஆகிய இடங்களில் வானசாஸ்திரம் பற்றிய தன் விரிவுரைகளை திரு கென்றி மாட்டின் ஆரம்ப்பித்தரர். விளக்க மாதிரியாக அவர் அந்தரத்தில் தொங்கும் விளக்குகளை அமைத்து காண்பித்தார்.
1842.06.02 ஆராய்ச்சிக் கந்தர் என அழைக்கப்பட்ட திரு கந்தப்பிள்ளை தனது 76 வுது வயதில் மரணமடைந்தார். இவர் ஓர்
கவிஞரும் வைத்தியரும் ஆவார். இவர் ஆறுமுகநாவலரின் தந்தையாவார் சுமார் 20 வெண்பாக்களை இவர் எழுதியிருந்தார்.
1842.08.22யாழ்ப்பாணத்தில் புகையிலை சாகுபடியில் ஈடுபட்ட ஓர் ஆங்கிலேய கனவான் பேர்னாம்புக்கோவில் விளையும் பருத்தி விதைகளில் இருந்து அதிக பஞ்சை கொடுக்க கூடிய விளைச்சலை இங்கு செய்யலாம் எனவும் ஒரு இறாத்தல் பஞ்சு விளைவிக்க ஐந்து சிலிங்குகள் ஆகும் என தெரிவித்தார்.
1842.10.22 யாழ்ப்பாண நீதிமன்றின் செயலாளர் முதன் முதலாக யாழ் வாசிகசாலையை திறந்து வைத்தார் இதுவே இன்றைய யாழ் பொதுசன நூல்நிலையத்திற்கு முன்னோடியாக அமைந்தது
1842.10.22வண்ணார்பண்ணையில் ஓர் சைவத்தமிழ் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது
1842.11 தீவுப்பகுதி மாவட்டத்தளபதி திரு யோன் ரொட்ரிகோ முத்தையா காலமானார்
1842.12 மன்னாரில் காலரா தொற்று நோய் ஆரம்பித்தது 700 பேருக்கு. 500 இறந்து போயினர்.
1843 ஒராசியோ பெற்றகினி என்னும் இத்தாலிய குருவானவர் யாழ்ப்பாணத்தின் முதல் ஆயராக நியமனம் பெற்று வந்தார்.
பெப் 8 பதினைந்து ஆண்டுகள் வடமாகாண அரச அதிபராக வேலை செய்த திரு டைக் வருமானவரி காரியாலயத்தின் கணக்கு
மேற்பார்வையாளராகவும்;, கணக்காளர் நாயகமாகவும், கட்டுப்பாட்டாளராவும் நியமனம் பெற்று கொழும்பு வந்தார்
ஏப்ரல் 1 மன்னாரில் முதலாவது அரச பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது மன்னார் கச்சேரியில் ஓர் அறையில் ஆரம்பிக்கப்பட்டது
ஏப்ரல் 2 வலிகாம ராணி அப்புக்காத்துவின் உதவியாளரும், வழக்கறிஞருமான சுப்பிரமணிய அம்பாலவாணர் என்னும் வழக்கறிஞர் தீவுப்பகுதியின் பதில் நீதவானாக நியமனம் பெற்றார்.
யூன் மட்டக்களப்பு குருமனையில் 11 வருடங்களாக வேலை செய்த திரு கென்றி மாட்டின் குருமனையுடன் தனது தொடர்புகளை துண்டித்துக்கொண்டார்.
1843 யூலை ஏக்கர் 5 சிலிங் விலையில் யாழ்ப்பாணக்காணிகள் ஐரோப்பிய துரைமாருக்கு விற்கப்பட்டது.
ஆவணி யாழ்ப்பாணத்தில் சின்னம்மை பரவத்தொடங்கியது. நோயாளர்கள் அனைவரும் சிறுதீவிற்கு மாற்றப்பட்டனர்.
ஆவணி 11 யாழ்ப்பாண முன்னேற்ற சபை ஆரம்பிக்கப்பட்டது.
நவம்பர் 1 திரு டைக் யாழ்ப்பாணத்திற்கு திரும்பவும் அரச அதிபராக நியமனம் பெற்று வந்தார்
நவம்பர் 12 கொழும்பில் கத்தோலிக்க அச்சகம் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள டச்சு ஆலயத்தின் முகப்பில் மின்னல் தாக்கியது.
டிசம்பர் 2 யாழ்ப்பாணத்தில் கடும் புயல் வீசியது. கென்றி மாட்டின் அரச களஞ்சியக்காராக நியமிக்கப்பட்டார்.
1843 டிசம்பர் 15,877 ஏக்கர் அரச நிலம் விற்பனைக்கு விடப்பட்டது. வடமாகாணத்தில் 500 ஏக்கர் நிலம் 20 சிலிங்கிற்கு விலை போனது.
1844 தெல்லிப்பளை விளானைச் சேர்ந்த கவிஞரான திரு சுவாம்பிள்ளை மரணமானார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர் தொன்மை பாட்டுக்களை தொகுத்தார். இவர் பல பாடசாலை நூல்களையும் தொகுத்தார்.
1844 அச்சுவேலியை சேர்ந்த கதிரேசு புலவர் மரணமானார். இவர் பத்ம பூசண நாடகத்தையும், வேறு சில சிறு நாடகங்களையும் இயற்றினார்.
யூன் 150ற்கு மேற்பட்ட யானைகள் வன்னியில் கொல்லப்பட்டன. இதற்கு வெகுமதியாக ஒரு யானைக்கு 15 சிலிங் பணம் வெகுமதியாக அரசால் வழங்கப்பட்டது. மன்னார் பச்சிலைப்பள்ளி மாவட்டங்களிலும் இவ்வாறு யானைகள் கொல்லப்பட்டன.
யூலை 13 பொலிஸ் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
யூலை குற்றவிசாரணைகளின் போது யாழ்ப்பாணம், மன்னார், சிலாபம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களை தவிர்ந்த ஏனைய நீதி மன்றங்கள் விரைவில் பூட்டப்படும் என பிரதமநீதியரசர் சேர் அந்தோனி ஒலியன்ஸ் அறிவித்தார்.
ஆவணி 14 புத்தூர் வெள்ளைப்பரவையில் உள்ள உப்பளத்தின் மீது தடிகள், கத்திகளுடன் தாக்குதலை மேற்கொண்ட 300-400 இடைப்பட்ட கோஷ்டி கைதுசெய்யப்பட்டனர் இரு கோஷ்டி தலைவர்கள் கைதின்போது விசாரணை செய்யப்பட்டு பின் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
1844 ஆவணி இளவாலை புனித மரியாள் ஆலயம் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
செப் 20 பிரிட்டிஷ் இந்தியரான யோன் பொட்டோர் எனப்படும் மொழிபெயர்பாளர் மரணமானார்; 1795ல் யாழ்ப்பாணம்.ஆங்கிலேயரிடம் சரணடைந்தபோது இவரே மொழிபெயர்ப்பினராக இருந்தார்.
செப்ரம்பர் 24 யாழ்ப்பாண குரு முதல்வர் ஆக வணடாக்டர் பிரான்சிஸ் நியமிக்கப்பட்டார்;
ஒக்டோபர் வடமேல் மாகாணம் புதிதாக உருவாக்கப்பட்டது.
ஒக்டோபர் 30 வணக் கிறிஸ்ரியன் டேவிட்டின் சகோதரர் வண ஞானப்பிரகாசம் டேவிட் தஞ்சாவூரில் மரணமானார்.
1844 நவம்பர் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய இடங்களில் சின்னம்மை நோய் பரவியது.
1844 நவம்பர் றொபேட் யோன் டன்லப் என்பவர் யாழ்ப்பாணம் வந்து தென்னை பயிரிடுவதை ஆரம்பித்தார்.
நவம்பர் 800 ஏக்கர் நிலத்தில் பச்சிலைப்பள்ளி மாவட்த்தில் ஐரோப்பிய பெருந்தோட்ட முதலாளிமார் தென்னை பயிரிட்டனர். ஏக்கர் ஒரு பவுன்ஸ்படி இவர்களுக்கு நிலம் விற்கப்பட்டது.
டிசம்பர் 20 இலங்கையில் அடிமை முறை முற்றாக அழிக்கப்பட்டது. வெகுசன மராமத்து இலாகாவைச்சேர்ந்த திரு பைர்ன் என்பவர் யாழ்ப்பாணத்தில் வடிகாலமைப்பு முறையை ஆரம்பித்தார்.
1845 சனவரி 1 விண்ணப்ப கோடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நீதவான்கோடு, பிரதேசகோடு ஆகிய புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. ஊர்காவற்துறை மாஐன்திரேட் நீதிமன்றம் விண்ணப்பக்கோடு ஆகியவற்றின் ஆணையாளராக திரு அம்பலவாணர் நியமிக்கப்பட்டார்.
பெப் 1 அரச வேலையாளர்கள் விவசாய வர்த்தக வழக்குகள் போடுவது நிறுத்தப்பட்டது.
பெப் 7 ஆசிய சபையின் இலங்கை கிளை ஆரம்பிக்கப்பட்டது. சட்டசபையில் உத்தியோகப்பற்ற அலுவலகர்களாக திரு Nஐ சிமித், எஸ் எதிர்மனசிங்கி ஆகியோர் சத்திய பிரமானம் செய்தனர்.
சரவணமுத்து புலவர் காலமானார். இவர் ஒரு தொகுதி புத்தகங்களை சமஸ்கிரதத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்தார்.
1845 கத்தோலிக்க தமிழ் புலவர் இன்னாசிமுத்து மரணமானார்.
மே 6 இலங்கை கத்தோலிக்க சபை இரு ஆயர் பகுதிகளாக பிரிக்கப்பட்டது. கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய இரு பிரிவுகளுக்கும் இணைப்பாளராக வண பிதா பெற்றகினி நியமிக்கப்பட்டார்.
ஒக்டோப் 5 ரொறோனோ ஆயராக வண பெற்றகினி அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரே இலங்கை அப்போஸ்தலிக்க சபையின் இணைப்பாளருமாவார்.
யாழ்ப்பாணத்தில் சின்னம்மை பரவத்தொடங்கியது.
நிலச் சுவாந்;தாரும் முன்மாதிரி பண்ணையாளருமான திரு பிலிப் சின்னவர் 78 வயதில் காலமானார்
1846 பெப் 8 கொழும்பு புனித லூசியா தேவாலயத்தில், வண டாக்டர் பெற்றக்கினி தொறோனாவின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
மார்ச் யாழ்ப்பாணம், கண்டி மாவட்டங்களில் பரவிய கொலரா நோயினால் வடமாகாணத்தில் 10000க்கும் மேலானோர் இறந்தனர்.
1846 ஏப் 1 Nஐ.எல்.பிளண்டோக்கா என்பவர் அரச அதிபர் காரியாலயத்தின் எழுத்தாளர் ஆக நியமிக்கப்பட்டார். முதலாவது புகை
யிரத சேவை பத்திரங்கள் காலணியை வந்தடைந்தது. வலிகாமம் மேற்கு மற்றும் தீவுப்பகுதி மணியகாரர் ஏதிர்வீரசிங்கி தலைவாசிங்கி முதலியார் மரணமடைந்தார்.
யூன் 15 அரச ஆசியச் சபையின் முதலாவது பத்திரிகை வெளியிடப்பட்டது.
யூன் 16ம் பயஸ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரின் தெரிவு தேர்தல் யூன் 21ம் திகதி முடிசூட்டப்படுவார்.
யூலை கொழும்பு புரட்டஸ்தாந்து திருச்சபை விசப்பாண்டவர் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்தார்
நவம்பர் 16 விதவைகள், அனாதைகள், பெண்கள் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது
டிசம்பர் அமெரிக்க மிசனை சேர்ந்த டபிள்யு கௌலண்ட் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்தார்
செல்விகள் எலிசா அக்னியு, கப்பெல் ஆகியோரின் பராமரிப்பில் உடுவில் பெண்கள் பாடசாலை விடுதி அமெரிக்க மிசனால் ஆரம்பிக்கப்பட்டது
1847 ஏப்ரல் 19 nஐனல் சேர் Nஐ ஆர் ரெனன்ற் லெப்ரினன்ற் கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்
மே 29 ரொறிங்டன் பிரிவு காலியிலிருந்து வந்து இலங்கை கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்
செப் 17 பெற்றகினி ஆயர் யாழ்ப்பாண குரு முதல்வராக நியமிக்கப்பட்டார்
திருமணப்பதிவுச் சட்டம் அமுலாக்கப்பட்டது.
நவம்பர் 28 அமலோற்ப தியாகிகள் சபையை சேர்ந்த குருவானவர் வண செமேரியா யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமல உற்பவ தியாகிகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையானது அதி வண டாக்டர் மசனோற் மார்செய்ஸ் ஆயர் அவர்களால் 1815ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. வண பிதா செமேரியா, வண பிதா கிற்றிங், சங்கைக்குரிய சகோதரர் ஸ்ரிபன் கஸ்பாக் ஆயோர் அதன் முதல் உறுப்பினர்கள் ஆவர்.
டிசம்பர் 31 இந்து சமயத்தை பாதுகாப்பதற்காக கல்விமானும் சைவ மறுமலர்ச்சியாளனுமாகிய ஆறுமுக நாவலர், வண்ணார்பண்ணை சிவன்கோவிலில் தொடச்சியான தனது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
அமெரிக்க மிசனைச் சேர்ந்த டாக்டர் வார்ட் அமெரிக்கா திரும்பினார். அமெரிக்க மிசனைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் பிலக் கிரீன் என்பவர் அதன் வைத்திய ஸ்தாபனத்தை பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
1848 மார்ச் சிலுவை அடியில் இருக்கும் தேவமாதாவின் ஒப்பாரி பாடல் கென்றி மார்டினால் இயற்றப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 11 முதன்முதலாக இலங்கையில் ஐஸ்கட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் கத்தோலிக்க குருமடம் எனப்படும் முதலாவது கத்தோலிக்க ஆண்கள் ஆங்கிலப்பாடசாலை வண ஆயர் பெட்டக்கினியால்ஆரம்பிக்கப்பட்டது.
ஒக்ரோபர் 1 சேர் வில்லியம் ரூவைனன் யாழ்ப்பாண உதவி அரச அதிபராக நியமிக்கப்பட்டார்.
வீதிப் போக்குவரத்துச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. யாழ்ப்பாண பேராலயம் குறித்த குழப்பம் அடைக்கலமாதா கோவிலின் ஆயர் பெற்றாக்கினிக்கு எதிராக இடம் பெற்றது. இக்கலம்பகத்தின் போது திரு றொபேட் வில்லியம் லாங்ஸ்யோ கடுமையாக காயமுற்றார்.
1849 சனவரி 6 மட்டக்களப்பு குருமடத்தைச் சேர்ந்த சண்முக சட்டம்பியார் 55 வயதில் மரணமடைந்தார். இவர் சிறந்த கல்விமானும் தமிழ் ஆசிரியருமாவார்.
1849 சைவ சித்தாந்த தத்துவத்தின் மூன்று கோவைகள் டாக்டர் கொய்சிங்ரனால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
யூலை 15 றொபேட் வில்லியம் லாங்ஸ்போ மரணமானார்.
மாந்தோட்டத்தில் கோவாவைச் சேர்ந்த குருவானவர் மிக்காயேல் பிலிப் மாஸ்காறோனஸ், ஆயர் பெற்றாக்கினிக்கெதிராக கிளம்பி எழுந்தார். மன்னார் மாதோட்ட கிளைகள் இரண்டாக பிரிந்தன.
செப்டம்பர் யாழ்ப்பாண பிரதான தெருவில் ஸ்ருவாட்ஸ் தோட்டம் ஆயர் பெற்றாக்கினிக்கென ஓர் வாசல்தலம் அமைக்க வாங்கப்பட்டது.
"வரலாறு எமது வழிகாட்டி "
- மனோகரன் மனோரஞ்சிதம்-