Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

‘தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை’: வரலட்சுமி கணவர் சுவாரஸ்யம்

.

‘தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை’ என வரலட்சுமி கணவர் நிக்கோலாய் குறிப்பிட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் திருமணம் ஜூலை 2ஆம் தேதி நடந்தது.

நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி நிக்கோலாய் திருமணம் ஜூலை 2ஆம் தேதி கோலாகலமாய் நடந்தது. நிக்கோலாய் தொழில் அதிபர் ஆவார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய நிக்கோலாய் தமக்கு தமிழ் தெரியாது. தமிழில் தெரிந்த ஒரே வார்த்தை பொண்டாட்டி என்றார்.

மேலும் தமக்கு அழகான மனைவியும், நல்ல மாமனாரும் கிடைத்துள்ளார்.

நான் தமிழ் கற்றுவருகிறேன். விரைவில் தமிழ் கற்றுவிடுவேன். எனக்கு பூர்விகம் மும்பை கிடையாது. நான் சென்னையை நேசிக்கிறேன்” என்றார்.

வரலட்சுமி சரத்குமாரின் மருமகன் நிக்கோலாய்யின் இந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை வரலட்சுமி தென்னிந்திய படங்களில் வில்லி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அவரின் கைவசம் முக்கிய படங்கள் உள்ளன. நிக்கோலாய் தொழிலதிபராக உள்ளார். முன்னதாக நிக்கோலாய் உடனான காதலை வரலட்சுமி அறிவித்த போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில், நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆவார். அவருக்கு தோள் மேல் வளர்ந்த பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.