படுவான்கரையும், எழுவான்கரையும் இணைக்கும் மண்டூர் - குருமண்வெளி பிரதான பாலங்கள் அமைக்கப்படுமா?. அடிக்கல் வைப்பதை விட வேறு எந்தவொரு முயற்சியும் இல்லை!
.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரையும், எழுவான்கரையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமைந்துள்ள மண்டூர் - குருமண்வெளி பாலம் பல ஆண்டுகளுக்கு மேலாக எதுவித முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் காணப்படுகின்றது. அடிக்கல் வைப்பதை விட வேறு எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படாமல் இருக்கின்றது என்பதை அமைச்சர் அறிவாரா?
ஆமெனில், மேற்படி பாலம் தொடர்பாக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதையும், இதற்காக அமைச்சரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
ஆ)மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முணை தென்மேற்கு, மண்முணை தென்எருவில் பற்றினை இணைக்கும் அம்பிளாந்துறை, குருக்கள்மடம் பாலம் புதிதாக நிர்மாணித்தல் சம்பந்தமாக இதுவரை காலமும் எதுவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அமைச்சர் அறிவாரா?
ஆமெனில், இதற்கான காரணம் யாதென்பதையும், இதற்காக அமைச்சரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
இ) கோறளைபற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திகிலிவெட்டை-சந்திவெளி பாலம் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புன்னக்குடா- களுவன்கேணி பாலம் ஆகிய பாலங்கள் புதிதாக அமைத்தல் தொடர்பாக எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அமைச்சர் அறிவாரா?
ஆமெனில் இதற்காக அமைச்சரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
அமைச்சரின் விளக்கம்,
பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் அவர்களின் மூன்றாவது கேள்விக்கு அமைய அ.1. இக்கேள்விக்கு நான் உத்தியோகப்பூர்வ பதிலை தருவேன். அதன் பின்னர் அது குறித்த விளக்கத்தை தருகிறேன். அ.1. உங்களது கேள்வி வீதி அபிவிருத்தியுடன் தொடர்புடையது அல்ல. இது கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது ஆகும். இரண்டாவது வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது அல்ல. இது கிழக்கு மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது ஆகும். மூன்றாவது வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது அல்ல. இது கிழக்கு மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது ஆகும். ஆ.1. வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது அல்ல. இது கிழக்கு மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது ஆகும். ஆ.2. வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது அல்ல. இது கிழக்கு மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது ஆகும். இவ்வாறாகவே அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் காணப்படுகின்றன. இதில் இறுதியாக கேட்கப்பட்டுள்ள கேள்வியொன்று உள்ளது. எ.2. இல் கௌரவ சபாநாயகர் அவர்களே முன்மொழியப்பட்டுள்ள புன்னக்குடா களுவாங்கேணி பாலம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது அல்ல. இது கிழக்கு மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது ஆகும். அதனால் ஏ. உம் தொடர்புடையது அல்ல. எனினும் நீங்கள் முன்வைத்துள்ள கேள்வி எனது அமைச்சுடன் தொடர்புடையது அல்ல என்ற போதிலும் இது அப்பிரதேச மக்களை பாதிக்கும் பிரச்சினை என்பதால் இது தொடர்பில் தெளிவுபடுத்த நான் தயாராக வந்துள்ளேன்.
மண்டூர் குருமண்வேலி பாலம், இது குட்வில்-இனாலேயே முன்னெடுக்கப்படுகிறது. மண்டூர் குருமண்வேலி பாலத்தை நிறுவுவது தொடர்பில் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு, ஆம் அவ்விடத்தில் சுமார் 800 மீற்றர் தூரத்திற்கு களப்பின் ஊடாக பயணிப்பதற்கு மண்டூர் படகு சேவையொன்று செயற்படுத்தப்படும். மண்டூர் பாலம் நிர்மாணிக்கப்படாமைக்கு காரணம் இது வீதி அதிகார சபையுடன் தொடர்புடையது அல்ல என்பதுடன் புதிய பாலமொன்றை அமைப்பதற்கு சுமார் 9 பில்லியன் ரூபாய் செலவாகும். அடுத்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு எருவில் தொடர்புபடுத்தும் அம்பிலான்துறை குருக்கள்மடம் பாலம் நிர்மாணிப்பு தொடர்பில் வினவியுள்ளீர்கள். அதுவும் சுமார் 900 மீற்றர் தூரம் வரையான பாலம் அதற்கும் சுமார் 10 பில்லியன் வரை செலவாகும். அதுவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடையது அல்ல. கோரளைப்பற்று பிரதேச சபைக்கு உரிய திகிலிவெட்டை சந்திவெளி பாலம் மற்றும் ஏறாவூர்ப்பற்றுக்கு சொந்தமான புன்னக்குடா களுவாங்கேணி பாலம். அது சுமார் 200 மீற்றர் வரையான பாலம். அதற்கு சுமார் 2 பில்லியன் ரூபாய் வரை செலவாகும். அதுவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது அல்ல. அதனால் கௌரவ சபாநாயகர் அவர்களே, 2012ஆம் ஆண்டில் ஜய்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பில் களப்பின் ஊடாக பாலமொன்றை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளனர். அதில் நீங்கள் கூறிய இடங்களையும் உள்ளடக்கியதாக வரைபடமாக்கப்பட்டுள்ளது. அதில் மக்களின் தேவையையும் கருத்திற்கொண்டு இரண்டு பாலங்கள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உங்களது கவனத்திற்காக நான் இதனையும் முன்வைக்கிறேன். உங்களது புரிதலுக்காக நான் இவற்றை முன்வைத்தேனே தவிர இது எனது விடயத்திற்கு பொறுப்பானது அல்ல.
அதனை தொடர்ந்து எனது கருத்து.
அமைச்சர் அளித்த விளக்கத்திற்கு நன்றி. எனினும் அமைச்சர் கூறியது போன்று இது மாகாண சபைக்குரிய விடயம் எனில், இந்த பாலங்கள் எவையும் நிர்மாணிக்கப்படும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் மாகாண சபைகளுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் பணம் சம்பளம் வழங்குவதற்கு கூட போதாது. நீங்களும் அதனை அறிவீர்கள். மாகாண சபைகளுக்கு நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ளும் முறைமையும் இல்லை. அதனால் தான் மாகாண சபைக்கு அந்த அதிகாரத்தை பெற்றுக் கொடுக்குமாறு நாம் கூறுகின்றோம். நீங்கள் கூறும் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை குறித்து நான் அறிவேன். மண்முனை பாலமும், கல்லடி பாலமுமே புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. ஏனையவை 2012ஆம் ஆண்டின் பின்னர் 2015ஆம் ஆண்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இது வீதி அதிகார சபையினாலேயே மதிப்பீடு செய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களை சந்தித்த போதும் முல்லைத்தீவு வட்டுவால்கால் பாலம், திருகோணமலை களுபாலம் போன்ற பாலங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அடுத்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக இப்பாலங்களில் சிலவற்றை ஏனும் நிர்மாணித்து தருமாறு நாம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
மட்டக்களப்பில் எழுவான்கரை படுவான்கரை என்பது களப்பொன்று. பணம் இல்லை என்றாலும், இதனை நிர்மாணிப்பதற்கு நாம் ஏதேனும் ஒரு முறையை செயற்படுத்த வேண்டும். இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேற்றும் எனில் அதன் மீது நம்பிக்கை வைக்க முடியும். ஆனால் இதனை மாகாண சபையினாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என நீங்கள் கூறுவதாயின் அது நடைபெறாது என்பதை நாம் அறிவோம்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, நீங்கள் இது குறித்து ஜனாதிபதியிடம் முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளீர்கள். நான் நாட்டிலுள்ள நிதி நிலைமைக்கு அமைய இதனை முன்வைத்தேன். ஜனாதிபதியை சந்தித்த போது முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பு தொடர்பில் முன்மொழியப்பட்டிருந்தது. வரவு செலவு திட்டத்தின் போது அது தொடர்பில் கவனம் செலுத்த எதிர்பார்த்துள்ளோம். நாட்டின் நிதி நிலைமை குறித்து உங்களுக்கு புரிதல் உண்டு. இதனை நிறைவேற்ற நாம் முடிந்தளவு முயற்சி செய்கிறோம். தற்போதைக்கு நான் கூறுவதென்றால் சட்டப்பூர்வாக இது எனது விடயப்பரப்பிற்கு தொடர்பற்றது. அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்படுமாயின் நிதி அமைச்சு அதற்கான நிதியை பெற்றுத் தருமாயின் நாம் அந்த பாலத்தை சிறப்பாக நிர்மாணித்து தருகின்றோம்.
இந்த பாலம் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலகமாக போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு படகு சேவையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நான் கூறுவது மாகாண சபைக்கு பணம் இல்லை. தற்போது காணப்படும் படகு சேவை நாம் முந்தைய அரசாங்கத்துடன் கலந்துரையாடி இரண்டு படகுகளை பெற்றுக் கொண்டோம். மூன்றாவது படகு சந்திவெளிக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் சாதாரணமாக பாலம் இருக்கும் போது பாலத்தில் சென்று வருவதற்கு பணம் அறவிடப்படுவதில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த படகு சேவைக்கு பணம் அறவிடப்படுகிறது. மிகுந்த வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களே இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போன்று இந்த படகு சேவையை சேவை ரீதியில் முன்னெடுப்பதற்கு மாகாண சபைக்கு அரசாங்கத்தின் ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுக்க முடியுமா. இது எனது ஒரு வேண்டுகோள்.
இன்றும் மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக கிராண் பாலம் நீரில் மூழ்கியுள்ளது. அதனால் மக்கள் படகு போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலங்கள் இல்லாவிடின் மக்கள் படகினையே பயன்படுத்துகின்றனர். யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகளுக்கு பின்னரும் மட்டக்களப்பில் மாத்திரம் இந்த நிலைமை காணப்படுகிறது. எனவே இந்த படகு சேவையினை இலவசமாக பெற்றுக் கொடுப்பதற்கு மாகாண சபைக்கு மத்திய அரசினால் ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுக்க முடியுமா?
கௌரவ சபாநாயகர் அவர்களே, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அருண் ஹேமசந்திரா அவர்களும் உங்களுடன் இருக்கின்றார். எனவே முன்மொழிவொன்றை முன்வையுங்கள். நாட்டின் நிதி நிலைமையுடன் அந்த நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க முடியுமா என நாம் பரிசீலனை செய்கின்றோம்.