Breaking News
நாம் தோற்றுப் போய்விட்டோமா?
ப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும்.
நாம் தோற்றுப் போய்விட்டோமா?
குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும். அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல. ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை
இது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும். பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான். அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள். அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான். ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான்.
எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள். எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும். இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது . எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை