Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வலிந்து​ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள் கையேந்தும் வர்க்கத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

வலிந்து​ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

வலிந்து​காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள் கையேந்தும் வர்க்கத்தில் உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை போராட்டம் இடம்பெற்றது. கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு முன்பாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.