Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டிரம்பிற்கு(Trump) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்து மடல்!

.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டிரம்பிற்கு(Trump) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்து மடல்!
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு, திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் நவம்பர் 26, 2024 வழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.அந்த கடிதத்தில்;

ஈழத் தமிழர்களாகிய நாங்கள், "பலத்தின் மூலம் அமைதி" என்ற உங்கள் தத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இத்தகைய பலம் இராணுவ வலுவில் இருந்து மட்டும் வருவதல்ல. அனைத்து மனிதகுலத்திற்கும் உலகளாவிய அடிப்படைக் கொள்கைகளான உண்மை, நீதி, சுதந்திரம் மற்றும் மக்களின் விருப்பம் ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பதன் மூலமும் வருகிறது.

நாடுகளுக்கு மட்டுமல்ல, நாடற்ற இனங்களுக்கும் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் இருக்கும் ஒரு புதிய உலக ஒழுங்கை உங்கள் தலைமைத்துவம் கொண்டு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நீதி மற்றும் தற்போது உலகெங்கும் நடந்து வரும் போர்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும் உங்கள் தலைமைத்துவம் முடிவிற்கு கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

ருத்ரகுமாரன் இறுதியில்; வன்முறைக்கு எதிரான உங்கள் துணிச்சலான எதிர்ப்பு, உண்மை, நீதி, சுதந்திரத்தை வேண்டி நிற்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.உங்களது தேர்தல் வெற்றியானது எதிர்ப்பின் அடையாளமாகவும், ஊழல் நிறைந்த அதிகாரங்களுக்கு எதிரானதாகவும் உள்ளது.
உங்களது ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். சுதந்திரமும், நீதியும் உள்ள சகாப்தத்தை நோக்கி உலகை வழிநடத்துங்கள்