Breaking News
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க நோர்வே முடிவு.
நோர்வே அரசியல் மற்றும் ஊடகங்கள் மட்டத்தில் பேசுபோருளாக இருந்து வந்தது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது.
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க நோர்வே முடிவு.
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க நோர்வே முடிவு செய்துள்ளது. இது விடயம் கடந்த பல மாதங்களாக நோர்வே அரசியல் மற்றும் ஊடகங்கள் மட்டத்தில் பேசுபோருளாக இருந்து வந்தது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது.இதற்கு நோர்வே நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவு முன்னேரே கிடைத்திருந்தது. அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியனவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவுள்ளன. இஸ்ரேல் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நோர்வேக்கான இஸ்ரேல் தூதரை நாட்டுக்கு அழைத்துள்ளது. பாலஸ்தீனத்திற்கான உதவி வழங்கும் நாடுகளின் குழுவில் நோர்வேயின் பங்கு சார்ந்து எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என நோர்வேயை இஸ்ரேல் எச்சரித்துள்ளது.அண்மைய வாரங்களில் ஸ்பெயின் அயர்லாண்ட், நோர்வே ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உரையாடலின் பின்னரே இந்த முடிவு வெளிவந்துள்ளது. நீண்ட காலமாக மூன்று நாடுகளுக்கும் இடையே விரிவான இராஜதந்திர மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. மேலும் ஸ்பெயின் இது விடயத்தில் உந்து சக்தியாக இருந்துள்ளது காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை எல்லை மீறியுள்ள நிலையில் இந்த அறிவிப்பிற்கும் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் மீது கைது ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் முக்கியத்துவம் உள்ளது.