Breaking News
‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ எனும் கட்சி அறிமுகம்: ரஞ்சன் ராமநாயக்க தலைவர்
.
ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிட உள்ளதுடன்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சியில் இணைய உள்ளனர்.