“கடினமான நேரத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.
எந்த நிபந்தனையுமின்றி ஆட்சியை பொறுப்பேற்றிருந்தேன்.
“நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்டேன்”: ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை
“நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும்” என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே ஆட்சியை கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வியாக்கிழமை (09) விசேட உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“கடினமான நேரத்தில் பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். எந்த நிபந்தனையுமின்றி ஆட்சியை பொறுப்பேற்றிருந்தேன்.
அச்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இதன்படி, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் தற்போது 1.5சதவீதமாக குறைந்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அந்நிய செலாவணி கையிருப்பு ஐந்து பில்லியன் டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
சவாலான, கடினமான அத்துடன் சரியான பாதையை பின்பற்றியதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
“நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும்” என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே ஆட்சியை கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.