குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் – 20 க்கும் மேற்பட்டோர் பலி
.
“உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துமனையான இதில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர்.
தாக்குதல் நடந்த சில நொடிகளுக்கு பிறகு தங்களின் குழந்தைகளை கையில் ஏந்தியபடி தாய்மார்கள் வெளியே ஓடி வந்தனர்.
இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்த்துள்ளனர் என்றும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் மருத்துவமனையில் டயாலிசிஸ் பகுதி உட்பட 5 யூனிட்டுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மருத்துவமனை ஊழியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என பலர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 170 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மருத்துவமனை பிரச வார்டுகள், குழந்தைகள் நர்சரிகள், மக்கள் வசிக்கும் வீடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ கூட்டத்த்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுகொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செய்தியில், ரஷிய தீவிரவாதிகள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “,
உக்கரைன் தரப்பு ரைசியா ஏவுகணை மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், ரைசிய தரப்பு அமெரிக்க ஏவுகணை மூலமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ கூத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு செல்லும் நேரமும், இந்தியப் பிரதமர் ரைசியாவுக்கு வருகை தந்துள்ள அதே நேரமும் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதானது ரைசியா மீது பழிபோடும் செயலாகவே பார்க்கப் படுகின்றது.