Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ரஷியா உடனான நட்பு பலப்படுத்தப்படும்!

.

ரஷியா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஷெர்ஜி ஷோய்கு. தற்போது அந்த நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக உள்ளார். இவர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றார்.

அப்போது வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இருதரப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரஷியா ராணுவம் சுமார் 2½ ஆண்டுகளாக உக்ரைன் உடன் போர் நடத்தி வரும்நிலையில் ரஷியா ராணுவத்திடம் ஆயுதங்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ரஷியா ராணுவம், நட்பு நாடுகளிடம் ஆயுதங்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை அரங்கேறி உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷியா உடனான நட்பு மேலும் பலப்படுத்தப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பேசியுள்ளார்.