பிரியங்கா யார் தெரியுமா? அவரது முன்னாள் கணவரிடம் கேளுங்கள்; பாடகி சுசித்ரா வீடியோ வைரல்!
.
குக் வித் கோமாளி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் மணிமேகலை வெளியேறியதை தொடர்ந்து அதற்கு காரணம் வி.ஜே.பிரியங்காதான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரியங்கா குறித்து பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது குக் வித் கோமாளி. கடந்த 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த நிறுவனம் சமீபத்தில் அதில் இருந்து விலகியதால், வேறொரு நிறுவனம் இந்நிகழ்ச்சியை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதேபோல் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்து வருகிறார்.
அதேபோல் கடந்த சீசன்களில் ரக்ஷன் மட்டுமே தொகுத்து வழங்கி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனை ரக்ஷனுடன், மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில், குக்காக பங்கேற்க வந்த வி.ஜே.பிரியங்கா, தன்னை டாமினேட் செய்வதாகவும், தன்மானத்தை விட்டுவிட்டு இந்த வருமானம் எனக்கு தேவையில்லை என்றும் கூறிய வி.ஜே.மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரின் இந்த அறிவிப்பு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மணிமேகலை விலகளுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், பிரியங்காவுக்கு எதிரான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், தற்போது பாடகி சுசித்ரா, பிரியங்கா குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், குக் வித் கோமாளி அவ்வளவு முக்கியமான ஏன் மணிமேகலைக்கு ஆதரவாக வீடியோ போடுகிறேன் என்றால், பிரச்சனை ஷோவை பற்றியது அல்ல.
ஒரு புள்ளியை பற்றி ஒருவர் இவ்வளர் கன்னியமாக அந்த டாக்சிக் இடத்தில் இருந்து கிளம்பி வந்துவிட்டது மிகவும் தைரியமான முடிவு. அங்கு என்ன நடந்தது என்று தெளிவாக மணிமேகலை வீடியோ போட்டிருக்கிறார்.
இதன் மூலம் உங்கள் மீது மரியாதை அதிகமாகிறது. நீ என்னவெல்லாம் சந்தித்திருப்பாய் என்று எனக்கு புரிகிறது. பிரியங்கா எப்பேர்ப்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் கேட்டு பார்த்தால் புரியும்.
பிரியங்காவின் முன்னாள் கணவன் எனக்கு தம்பி மாதரி. ரொம்ப இனிமையானவன். ஆனால் அவனை நாசமா அடிச்சிடுச்சி. இதை நான் சொன்னால் ரூமர் என்று சொல்வார்கள் என்று சுசித்ரா பேசியுள்ளார்.