Breaking News
தேர்தல்களை எதிர்கொள்ளத் தயார்: தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம்
.
வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது, ஜனாதிபதி தேர்தலை, தமிழீழ விடுதலை இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பாகவும், வருகின்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.