Breaking News
கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு கூட்டங்கள்: மக்கள் சந்திப்பில் அரியநேத்திரன்
.
ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ள பா. அரியநேத்திரனுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவருகின்றது.
அதன்படி, இன்று கிளிநொச்சி இராமநாதபுரம் , சின்னச்சந்தை பிரதேசத்திற்கு சென்ற தமிழ்ப் பொது வேட்பாளருக்கு பொது மக்களால் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கின் சிவில் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரன் சங்குச் சின்னத்தில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் தேர்தல் பிரச்சாங்களை ஆரம்பித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் கிழக்கிலும் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன