Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; மேலும் மூவர் கைது

.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் அஸ்கிரிய, கம்பஹா மற்றும் உடுகம்பொல ஆகிய பகுதிகளில் கைதாகியுள்ளனர். 19, 22, 25 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்தமை முதல் குற்றம் இடம்பெறுவதற்கு முதல் நாளில் துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் ஹொரணேகாரகே தமிந்து லக்‌ஷான் என்பவரும்.சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிதாரியையும் தப்பிச்சென்ற பெண்ணையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் தமித் அஞ்சன நயனஜித் மற்றும் சமோத் கிமிஹான ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த முச்சக்கர வண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதற்கமைய கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். கடந்த 19ஆம் திகதி காலை புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள்ளே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சஞ்சீவ சமரக்கோன் எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.