தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக்கை கொல்ல பாஜக சதி?
.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் புதன் கிழமை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலுக்கான பிரச்சாரம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது. இந்நிலையில், கடைசி நாள் (திங்கள் கிழமை) பிரச்சாரம் முடித்து வீடு திரும்பும் பொழுது மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சியின் முக்கிய தலைவருமான அனில் தேஷ்முக் மீது நாக்பூரில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடோல்-ஜலால்கெடா சாலையில் உள்ள பெல்பாடா என்ற இடத்தில் அவரது கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கினர். இந்த தாக்குதலில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அனில் தேஷ்முக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அனில் தேஷ் முக் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்விஏ கூட்டணி போராட்டம் அனில் தேஷ்முக்கின் மகன் சலில் தேஷ்முக் கடோல் தொகுதியில் தேசிய வாத காங்கிரஸ் (சரத்) கட்சி வேட்பாள ராக களமிறங்குகிறார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார். தோல்வி பயம் காரணமாகவே பாஜக வினர் அனில் தேஷ்முக் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக எம்விஏ கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இந்த தாக்குதலை கண்டித்து கடோல் காவல்நிலையம் முன்பாக மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணிக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.