Breaking News
உக்ரைனுடன் மீதான ரஸ்யாவின் போரில் இலங்கையின் முன்னாள் இராணுவவீரர்கள்.
ரஸ்யாவுடன் இணைந்து போரிடுவது குறித்து மேற்குலகின் கவலை
ரஸ்யாவுக்காக போரிடும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் – மேற்குலக நாடு கவலை.
உக்ரைனுடன் மீதான ரஸ்யாவின் போரில் இலங்கையின் முன்னாள் இராணுவவீரர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுவது குறித்து மேற்குலகின் முன்னணி நாடொன்று கவலை தெரிவித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மேற்குலகம் வெளியிட்ட கரிசனையை தொடர்ந்தே இலங்கை அரசாங்கம் கூலிப்படையினராக போர்புரியும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது எனவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்தே பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் போரிடும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தவர்களின்குடும்பங்கள் தங்களிடம் விபரங்களை கோரியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.