Breaking News
“சீமான் பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்” - நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன்
.
திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல.
திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப நாட்களாகத் தெரிவித்து வரும் கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரின் கருத்துகளுக்கு திராவிடர் கழகத்தினர், த.பெ.தி.க. உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.