ஷவ்வால் தலைபிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை!
இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை மறுதினம் 21, புனித நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல்!
தலைபிறை தென்படவில்லை!
ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.
இதன்போதே, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை மறுதினம் (21) புனித நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை!
உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காத்தான்குடி பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திடல் தொழுகையில், பெருமளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்று ஒன்றுபட்ட சமுதாய உணர்வுடன் தொழுகையை நிறைவேற்றினர்.
பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தி வைத்தார். அவர் தனது உரையில் ஒற்றுமை, அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்வு அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதுடன், மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணம் போரா முஸ்லிம் சமூக விசேட இப்தார் நிகழ்வு!
யாழ்ப்பாணம் போரா முஸ்லிம் சமூகத்தின் விசேட இப்தார் நிகழ்வு அண்மையில் யாழில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், மாநகர பிரதி முதல்வர், முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் உள்ளிட்டோருடன் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் அவர்களும் இணைந்திருந்தார். இது மேற்படி சமூகத்தின் முதலாவது நல்லிணக்க இப்தார் நிகழ்வாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


