Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்தும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை..! சுகிர்தன்

,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை  என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பிரதேசசபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும் விருது வழங்கலும்  நேற்று காலை  பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு தலைமையேற்று நடாத்திய வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார்.

எமது வலி வடக்கு  பிரதேசமானது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்ட போதிலும் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது.

குறிப்பாக 21 வட்டாரங்களாகக் காணப்படினும் 20 வட்டாரங்களே விடுவிக்கப்பட்டுள்ள  போதிலும்  ஆனாலும் 

பலாலி வடமேற்கு  மற்றும் பலாலி மேற்கு ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படாத நிலையுள்ளது.

இந்த அரசு ஒரு வருடங்களை கடந்த போதிலும் மக்களின்  காணிகள் விடுவிக்கப்படவில்லை  தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கு எமது சபை உறுப்பினர்கள் முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவற்றோடு எமது தலைமை அலுவலகம் காங்கேசன்துறையில் அமைவதே எமது எதிர்கால இலட்சியமாகும்.  வரவுள்ள 2026ம் ஆண்டு வரவு செலவுத் திட்டமும் அதை நோக்கியதாகவே அமைந்துள்ளது. 

வளமான  எமது பிரதேசத்தில் வளங்கள் குறைவாக  இருந்தும் தற்போது இலங்கையிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் முதன்மையாக செயற்படுகின்றது எனத் தெரிவித்தார்.