Breaking News
யாழ். பல்கலை பொன்விழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஏற்பாடு!
,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸ் தலைநகர், பரிஸின் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும் இடத்தில் உள்ள Espace Shine மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தினதும், வடக்கு – கிழக்கு பிரதேச வளர்ச்சிக்கும் பல முயற்சிகளை செய்து வரும் LIFT ஆய்வு அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன், பிரான்ஸில் வாழும் யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாரம்பரிய காலை, கலாச்சார நிகழ்வுகளுடன் விருந்துபசார நிகழ்வும் இடம்பெறவுள்ளது.