Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

யாழ்ப்பாணம் வேலணையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்!

.

தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரைதேசிய மக்கள் கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று  தாக்கிய சம்பவம் ஒன்று வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது.
6ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையெங்கும்    நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தின் கள நிலைவரங்களை செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுட்டுக் கொண்டிருந்த வேளை,

வேலணை துறையூர் ஐயனார் வித்தியாலய வாக்காளர் மையத்தின் அருகே தேசிய மக்கள் கட்சியின்  ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்த சம்பவத்தை வீடியோ செய்தியாக சேகரித்துக் கொண்டிருந்த போதே குறித்த தேசிய மக்கள் கட்சியின்  குழு  ஊடகவியலாளரை தாக்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரால் ஊர்காவற்றுறை பொலிசில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.