Breaking News
பிரான்ஸில் வேலையில்லா திண்டாட்டம்
.
கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக France Travail அறிவித்துள்ளது.
catégorie A பிரிவில் (வேலை தேடுவோரில் செயற்பாடுகள் எதுவுமற்றவர்களுக்கான பிரிவு) வேலை தேடுவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் 1.43% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.அனைத்து A, B மற்றும் C பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 0.43% சதவீதமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பிரான்சில் பதிவுசெய்யப்பட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.487 மில்லியனாக உள்ளது.
மேலும் ஒக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 44.400 பேர் மேலதிகமாக தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.